- வணக்கம் நண்பர்களே பல மாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இவ்வளவு நாட்களாக கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருந்ததால் இந்த பிளாக்கர் பக்கம் வர இயலவில்லை. இன்று ஒரு அற்புதமான பதிவுகளை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்.
- உங்கள் கணினியில் உள்ள drivers களை எவ்வாறு மறைப்பது என்பதை பற்றி காண்போம் இதற்கு பல வழிகள் இருக்கலாம் பல மென் பொருட்கள் இருக்கலாம் ஆனால் அந்த மென் பொருட்கள் நாம் காசு கொடுத்து வாங்க வேண்டி வரலாம் அதனால் உங்களுக்கு மிகவும் எளிதான முறையில் எப்படி செய்வது என்பதை கற்று தருகிறேன்
- முதலில் Win + R ஐ அழுத்துங்கள் பிறகு அதில் CMD என்று Press செய்யவும் பிறகு comment ஆனது open ஆகும் அதில் கிழ்கண்டவாறு type செய்யவும்
- DISKPART என்று type செய்யவும்.
- பிறகு list Volume என்று type செய்யவும்
- பிறகு உங்களுக்கு தேவையான அதாவது நீங்கள் மறைக்க விரும்பும் drive வினை தேர்வு செய்ய வேண்டும் நான் மறைக்க விரும்பும் drive ஆனது E என்றால் select volume E என்று type செய்யவும். நீங்கள் என்ற driveவினை மறைக்க விரும்புகிறீர்களோ அதை தெரிவு செய்து கொள்ளலாம் அதாவது select volume D , select volume F என்று type செய்யவும்
- பிறகு Remove letter E என்று type செய்யவும். இப்போது E drive ஆனது இல்லாமல் இருக்கும்
- மேற்கண்டவாறே தொடர்ந்து எல்லாவற்றையும் type செய்து கொண்டே வாருங்கள்
- DISKPART -> List Volume -> Select Volume E
- இப்போது remove letter E ற்கு பதிலாக Assign Letter E என்று type செய்யவும். இப்ப்போது உங்களுக்கு hide செய்யப்பட்ட drive ஆனது திரும்ப வந்திருக்கும்
(குறிப்பு: இதை எப்போதும் அடிக்கடி செய்து பார்க்க வேண்டாம். எப்போதாவது உங்களுக்கு முக்கியமான தருணங்களில் மட்டும் செய்யவும் அடிக்கடி செய்வதன் மூலம் உங்கள் drive ஆனது delete ஆகவும் செய்யலாம் மிகவும் கவனமாக செய்யவும்)
No comments:
Post a Comment